1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Outsider Arrested for Working at Thanjavur Tasmac Shop Without Authorization

டாஸ்மாக் கடையில் பணிபுரிந்த வெளிநபர்.. வழக்குப்பதிவு செய்து ஒருவர் கைது..

tasmac
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்டம், பந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடையில் (எண். 8069) கடை பணியாளர் அல்லாத வெளிநபர் ஒருவர் பணியில் ஈடுபட்டு வருவதாக புகார் பெறப்பட்டுள்ளது. 
 
இப்புகாரின் அடிப்படையில் பந்தநல்லூர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சரத்குமார் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 
 
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
விஜய் இப்படி பண்ணக்கூடாது!.. கவனமா இருக்கணும்!.. திருமா அட்வைஸ்!..