1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tasmac income for the past four months

டாஸ்மாக்கில் 4 மாதங்களில் 17,854 கோடி வருமானம்!.. அம்மாடியோவ்!...

tasmac
தனியார் வசம் இருந்த மதுபான கடைகள் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் டாஸ்மாக் என்கிற நிறுவனம் துவங்கப்பட்டு அதன் கீழ் கொண்டுவரப்பட்டன. அப்போது முதலில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு பல கோடிகள் வருவாய் கிடைத்து வருகிறது.

ஒருபக்கம் டாஸ்மாக் ஊழியர்கல் பாட்டலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கிறார்கள் என மதுபான பிரியர்கள் தொடர்ந்து குற்றம் சட்டி வந்தாலும் எந்த அரசாலும் அதற்கு தடை விதிக்க முடியவில்லை. ஏனெனில் அதற்கு நடைமுறையில் நிறைய சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.. தற்போது ஜோசப் விஜய் தலைமையிலான தவெக பொறுப்புக்கு வந்த பின்னரும் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதை அவர்களாலும் தடுக்க முடியவில்லை..

இந்நிலையில்தான், கடந்த 4 மாதங்களில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.17,854.63 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது.  நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரை ஆயத்தீர்வை மூலம் 4,065.75 கோடியும், மதிப்பு கூட்டு வரி மூலம் ரூ.13,788.89 கோடியும் தமிழக அரசுக்கு வருவாயாக கிடைத்திருக்கிறது..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு!. இன்று முதல் அமுல்!...