கையெழுத்து போட முடியாது!. 6 நாட்கள் அவகாசம் கேட்கும் செந்தில் பாலாஜி!..
திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவரையும், இவரை சேர்ந்தவர்களையும் கரூர் கும்பல் என மக்கள் அழைக்கிறார்கள். தற்போது தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இந்த கரூர் கும்பலை காலி செய்ய வேண்டுமென முதலமைச்சர் விஜய் நினைப்பதாக தெரிகிறது. எனவேதான் தொடர்ந்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது..
ஏற்கனவே தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி பெயர் அடிபடுகிறது. செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவரும் சில நாட்கள் கையெழுத்துவிட்டார்.
இந்த நிலையில்தான் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாகவும் போலீசார் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் டாஸ்மாக் வழக்கில் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியிருப்பதால் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை 6 நாட்களுக்கு காவல்நிலையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு மனு தாக்கல் செய்திருக்கிறது.