டாஸ்மாக்கில் எக்ஸ்ட்ரா வாங்கினா FIR!.. உயர் நீதிமன்றம் அதிரடி..
தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிக்கு வந்தபின் டாஸ்மாக் தொடர்பாக பல அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக டாஸ்மாக் கடைகளிலும், நிர்வாகத்திலும் நடைபெறும் நிறைய முறைகேடுகள் தடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் டாஸ்மாக்கில் கூடுதல் கட்டம் வாங்க கூடாது என தமிழக அரசு சொல்கிறது.
ஆனால் சில நடைமுறை பிரச்சனைகளையும், செலவுகளையும் காரணமாக காட்டி டாஸ்மார்க் ஊழியர்கள் கூடுதலாக பத்து ரூபாய் தொடர்ந்து வசூலித்து வருகிறார்கள். சமீபத்தில் கூட டாஸ்மாக் ஊழியர் சங்கம் இனிமேல் நாங்கள் பத்து ரூபாய் வாங்க மாட்டோம்.. அரசு சொல்லும் விலையிலேயே விற்பனை செய்வோம் என கூறியது.
ஆனால் அது நடப்பது போல தெரியவில்லை. இந்நிலையில்தான் மதுபானத்திற்கு கூடுதலாக பணம் வசித்தால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மதுபானத்திற்கு கூடுதல் கட்டணம் கேட்டால் நுகர்வோர் காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்.. உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மேலும், மாநிலத்திற்கு பெரும் வருவாயை கொடுக்கும் டாஸ்மாக்கில் ஏன் ரசீது கொடுக்கப்படுவதில்லை எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.. அதோடு கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் காவலர்களை பணியமர்த்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது..