மதுபானங்களுக்கு கூடுதல் வரி!.. டாஸ்மாக்கில் விலை ஏறுமா?...
தமிழகத்தில் தனியார் வசமிருந்த மதுபானக் கடைகள் ஒரு கட்டத்தில் டாஸ்மாக் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு அதன் கீழ் கொண்டுவரப்பட்டு மதுபான கடைகளை அரே நடத்த துவங்கியது. இந்த நடவடிக்கை முதலில் எடுத்தவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
அதன் பின் கடந்த பல வருடங்களாகவே டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழகத்திற்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. அதன் மூலம் பல திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் டாஸ்மாக் தொடர்பான பல அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
குறிப்பாக பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதை தடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில்தான், டாஸ்மாக் மூலம் அரசின் வருவாயை அதிகரிக்க மதுபானங்களின் மீது கூடுதல் வரி விதிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை என்ற பெயரில் புதிய வழிமுறையை சேர்க்க சட்டசபையில் முன்மொழிவு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதனால் தற்போது உள்ள VAT வரி விகிதத்தை உயர்த்த அரசுக்கு அனுமதி கிடைக்கும். அதேநேரம், மதுபானங்களின் விலை உயரும் எனத்தெரிகிறது. ஒருபக்கம், கூடுதலாக கிடைக்கும் நிதியில் போதை மறுவாழ்வு உள்ளிட்ட பணிகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.