டாஸ்மாக் முறைகேடு!.. 2 பேரிடம் தீவிர விசாரணை!.. செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது கூட்டம் நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்தனர். இதற்குப் பின்னணியில் அரசியல் சதி செய்திருப்பதாக விஜயும், தவெகவினரும் நம்புகிறார்கள். குறிப்பாக செந்தில் பாலாஜி மீது அவர்களுக்கு சில விஷயங்களில் கோபம் இருக்கிறது.
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என தவெக கருதுகிறது. ஏற்கனவே தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் செந்தில் பாலாஜி கையெழுத்திட்டு வருகிறார்..
ஒருபக்கம் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாகவும் செந்தில் பாலாஜி மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி விரைவில் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டது.
டாஸ்மாக் நிதி முறைகேடு தொடர்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுபானக்கூட உரிமங்கள் வழங்குதல் மற்றும் போக்குவரத்து டெண்டர்களில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த வாகாரம் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பது.