1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tamilnadu tollgatest price are increased

தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு!. இன்று முதல் அமுல்!...

tollgate
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 60க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று முதல் வாகனங்களுக்கு ஏற்ப ஒரு வழிப்பயணம் மற்றும் மாதாந்திர கட்டணம் ரூ.5 முதல் ரூ.735 வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. விக்கிரவாண்டி, வாலாஜாபாத், செங்குறிச்சி, சமயபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரூ.5 முதல் 20 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.

லாரிக்கு சுங்க கட்டணம் ரூ. 380 வசூலிக்கப்பட்டு வந்து நிலையில் தற்போது அது 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 400ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. பேருந்துகளுக்கு ரூ.240-லிருந்து 10 ரூபாய் உயர்த்தப்பட்டு 250ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் ஒரு முறை பயணிக்கும் பேருந்து லாரி ஆகியவற்றுக்கு தற்போது வசூல் செய்யப்படும் கட்டணத்திலிருந்து ரூ.10ம், ஒரே நாளில் பலமுறை பயணிக்கும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு ரூ.15-ம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
52 கோவில்களில் செல்போனுக்கு தடை!.. இன்று முதல் கெடுபிடி!....