1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk party member said tvk mla gave money to vites

ஓட்டுக்கு 2 ஆயிரம் கொடுத்தாரு!... தவெக எம்.எல்.ஏ மீது தவெக நிர்வாகி புகார்!...

tvk
நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கி இரண்டு வருடங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார். முதல் நிலை வாக்காளர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விசில் சின்னத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள். குறிப்பாக திமுக, அதிமுக இல்லாமல் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே பலரும் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். தற்போது அவரும் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.
 
இத்தனைக்கும் திமுகவும், அதிமுகவும் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. ஆனால் தவெக வேட்பாளர்கள் யாருக்கும் பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றார்கள் என தவெக அமைச்சர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். மேலும் இந்த தேர்தலில்தான் பணம், ஜாதி, மதம் பார்க்காமல் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என என அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். திருச்சியில் முதல்வர் விஜயும் இந்த கருத்து தெரிவித்தார்.
 
இந்நிலையில்தான்,  ஒரு தவெக வேட்பாலர் ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக பணம் கொடுத்ததாக தவெக நிர்வாகியே கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஓமலூர் தொகுதி தவெக வேட்பாளர் அதியமான் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டி வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் லட்சுமணன் ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக சொல்லியிருக்கிறார்.  மேலும் அப்படி அவர் 2000 ரூபாய் கொடுத்ததால் அதற்கு அருகில் உள்ள தனது ஓமலூர் தொகுதியில் தனக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் பேசியிருக்கிறார்.
 
அடுத்த கட்டுரையில்
ரூ.15.15 லட்சம் கோடி வருமானம் போலி.. எல்.ஐ.சிக்கு 1,600 கோடி நஷ்டமா.. எல்.ஐ.சி பயனாளர்களுக்கு பாதிப்பா?