1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Speculation Mounts Over TVK's Participation in Upcoming INDIA Alliance Meeting in Delhi

ஜூலை 8ல் இந்தியா கூட்டணியின் கூட்டணி.. தமிழகத்தில் இருந்து கலந்து கொள்ள போவது திமுகவா? தவெகவா?

rahul vijay
வருகிற ஜூன் 8ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் இந்தியா கூட்டணியின் மிக முக்கிய ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகம் பங்கேற்கக்கூடும் என்ற புதிய அரசியல் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அண்மையில் நடந்து முடிந்த மாநில சட்டமன்ற தேர்தல்களில் இந்தியா கூட்டணியின் தூண்களாக கருதப்பட்ட திமுக மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடுமையான தோல்வியை சந்தித்தன. குறிப்பாக, தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, அதுவரை திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அக்கட்சியுடனான உறவை முறித்து கொண்டு புதிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு தனது ஆதரவை வழங்கியதுடன், தற்போதைய அமைச்சரவையிலும் பங்கெடுத்துள்ளது.
 
இத்தகைய பரபரப்பான சூழலில், ஜூன் 8 அன்று தலைநகர் டெல்லியில் கூடவிருக்கும் இந்தியா கூட்டணியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு, இதுவரை திமுக மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு எவ்வித அழைப்பும் அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
 
மாறாக, இந்த முக்கிய கூட்டத்தில் சுமார் 15 எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் புதிய அரசியல் விடியலை ஏற்படுத்தியுள்ள தவெகவை இந்தியா கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைப்பதற்கான தீவிர முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நயினார் நாகேந்திரனை அவசரமாக அழைத்த அமித்ஷா.. அண்ணாமலை விவகாரம் குறித்து ஆலோசனையா?