இன்னும் 30 வருஷம் குடிச்சா தமிழனோட DNA அழிஞ்சிரும்!.. சுகாதார நிபுணர் எச்சரிக்கை!..
தமிழர்களுக்கு மதுப்பழக்கம் என்பது பல வருடங்களாகவே இருக்கிறது. அதேநேரம் முன்பெல்லாம் மதுப்பழக்கம் என்பது கெட்ட பழக்கம் என்பதை மது குடித்தவர்களே உணர்ந்திருந்தார்கள். அதனால்தான் சாராயக்கடைகள் ஊருக்கு ஒதுக்குபுறம் இருந்தது. முடிந்த வரை யாருக்கும் தெரியாமல் அங்கு சென்று குடிப்பார்கள்.
ஆனால், தற்போது அரசே டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மதுபானக்கடைகளை நடத்துகிறது. இதனால் கடந்த பல வருடங்களில் மது அருந்தும் பழக்கம் படிப்படியாக அதிகரித்து தற்போது பதினைந்து வயது இளைஞர் கூட குடிப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் இளைஞர்களிடம் குடிப்பழக்கம் அதிகரித்து வருவது ஒரு தலைமுறையையே பாதிக்கும் என்பதை அவர்கள் உணருவதில்லை.
இந்நிலையில்தான் இதுபற்றி கருத்து தெரிவித்த பொதுச் சுகாதார நிறுவனர் குழந்தைசாமி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். 1971ம் வருடம் முதல் தமிழகத்தில் மதுவிலக்கு முடிவுக்கு வந்தது. அப்போதிலிருந்து இப்போது வரை இரண்டு தலைமுறையாக தமிழர்கள் மதுவை குடித்து வருகிறார்கள். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் மரபணுவிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
தொடர்ந்து மூன்றாவது தலைமுறையும் மதுவை குடித்தால் குழந்தைகள் பிறக்கும்போதே மதுவுக்கு அடிமையாக பிறக்க வாய்ப்பிருக்கிறது. ஆரோக்கியமாக இருந்த தமிழர்களின் மரபணு மாற்றமடைந்து பேரிடர் உருவாகும். இன்னும் தொடர்ந்து குடித்தால் அடுத்த 30 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகமே அழிந்துவிடும்.. இதற்கு மதுவை ஒழிப்பதே முழுமையன தீர்வு என அவர் கூறியிருக்கிறார்.