1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rr biriiyani shop onwer talk abbout bharathiraja

இலங்கையில் கூட பிரியாணி கடை வச்சிருக்கேன்!.. பாரதிராஜாதான் காரணம்!.. RR பிரியாணி ஓனர் பேட்டி...

rr biriyani
இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த 10ம் தேதி உடல்நலக் குறைபாடு மற்றும் வயது முதிர்வு காரணமாக சென்னையில் உள்ள அவரின் வீட்டில் மரணமடைந்தார். அதையடுத்து சென்னையில் அவரின் வீட்டில் திரையுலகினரின் அஞ்சலிக்காக அவரின் உடல் வைக்கப்பட்டது.

அப்போது ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்பிரபலங்கல் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல் பாரதிராஜாவின் ஆசைப்படி அவரின் உடல் 11ம் தேதி தேனியில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாரதிராஜா இறந்த செய்தி கேட்டவுடன் ஆர்.ஆர் பிரியாணி ஓனர் தமிழ்ச்செல்வன் ஓடோடி வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல் பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது அந்த இறுதிச் சடங்கிலும் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார்..

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘திரையுலகில் இன்றைக்கு எனக்கு இவ்வளவு நண்பர்கள் இருக்க காரணமே பாரதிராஜாதான். ஊடகங்களில் பேசு என என்னை தொடர்ந்து என்னை அவர் ஊக்கப்படுத்தி வந்தார். இலங்கை தமிழர்களுக்கான போராட்ட களத்தில்தான் அவர் எனக்கு அறிமுகமானார். இன்றைக்கு நான் இலங்கையில் எனது நிறுவனத்தை நடத்துகிறேன் என்றால் அது எல்லாமே அவர் கொடுத்த தைரியம்தான். ஏழைகளுக்கு குறைந்த உணவில் பிரியாணி கொடு’ என்று என்னிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
"மக்களிடம் கேட்டு முடிவெடுப்பது என் ஸ்டைல்" - அரசியலுக்கு வருவது குறித்து ராகவா லாரன்ஸ் அதிரடி விளக்கம்!