1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. supreme court appreciated cm vijay

தவெக ஆட்சி நல்லா போயிட்டிருக்கு!.. முதல்வர் விஜயை பாரட்டிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்!..

vijay
2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.

60 வருடங்கள் கழித்து தமிழகத்தில் திராவிட கட்சி இல்லாத ஒரு புதிய கட்சி ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறது. முதலமைச்சர் விஜயை பொருத்தவரை லஞ்சம், ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என விரும்புகிறார். எனவே அரசியல் அலுவலகங்களில் லஞ்சம் வாங்க கூடாது என கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்படியே அரசு அதிகாரி லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது..

இந்நிலையில், நேற்று தமிழக அரசு தொடர்பாக ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ‘தமிழகத்தில் இன்னும் சில விஷயங்கள் சரியாக வேண்டியிருக்கிறது.. ஆனாலும் தற்போதைய முதல்வரின் செயல்பாடுகள் குறித்து நல்ல தகவல்கள் வருகின்றன.. அந்த வகையில் தமிழகத்துக்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்’ என தெரிவித்துள்ளனர்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கட்டாய மாறுதல்: அதிரடி உத்தரவு..