ஆபாச நதி.. வன்ம நதி!.. ஸ்டாலின் என்னா ஒரு பெர்ஃபார்மன்ஸ்!.. கலாய்த்த விஜய்!...
தாராபுரத்தில் இன்று தவெக வேட்பாளர் மரகரம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஸ்டாலின் சாருக்கு மேடையிலேயே நடிச்சு பழக்கம் ஆயிடுச்சு.. என்னா ஒரு நடிப்பு? என்னை தோற்கடிச்சதுக்கு கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி என பேசியிருக்கிறார். அவர் அப்படி பேசினதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? திமுக ஆட்சியில் அவ்வளவு தப்புகள் நடந்தது.. அதனாலதான் கொளத்தூர் மக்கள் ஓட்டு போடவில்லை என்று அர்த்தம்.. இனி வர எல்லா தேர்தலிலும் இதே மாதிரி கையெடுத்துக் கும்பிட்டு ‘மக்கள் ஓட்டு போடல.. போடல.. கோடான கோடி நன்றி’ என சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்..
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மாதிரி தில்லா திமுகவை எதிர்ப்பது இந்த விஜய் மட்டும்தான். அது எம்ஜிஆர் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றாக தெரியும். இந்த ஆட்சியை அகற்ற புதிதாக திட்டம் போடுகிறார்கள். மக்கள் ஆதரவு இருக்கும்போது இவர்களின் கூட்டு சதி எடுபடாது.. எம்.எல்.ஏவாக இருந்து கொண்டு சத்தியபாமா தவெகவுக்கு வரவில்லை..
ராஜினாமா செய்து விட்டுதான் வந்தார்.. திமுகவும் மற்றும் அதிமுகவும் சேர்ந்து கொண்டுதான் அவதூறு பரப்புகிறார்கள்.திமுக மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறது... ஆபாச நதி, வன்ம நதியை வைத்து திமுக இப்படி பேசட்டும்.. மக்கள் நம்மை உயர்த்துவார்கள்.. கட்சிக்காரர்களை விட்டு எனக்கு எதிராக ஏவி விட்டு ஒருமையில் பேச வைக்கிறார் முக ஸ்டாலின்.. நாங்கள் மரியாதையாக பேசுகிறோம்.. ஆனால், அவரோ ’அவன் இவன்’ என்று பேசுகிறார்’ என அவர் பேசினார்.