1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm joseph vijay compaign in dharapuram

அம்மா ஆட்சி.. அடுத்து அப்பா ஆட்சி!. இது பிள்ளைகளின் ஆட்சி!.. தாராபுரத்தில் தெறிக்கவிட்ட விஜய்!..

vijay
முதல்வர் ஜோசப் விஜய் தாராபுரத்தில் இன்று மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:     

பல வருடங்களாகவே சர்க்காரியா கமிஷனை வைத்து திமுகவை அதிமுக கடுமையாக பேசி வந்தது. ஆனால், அதையே நான் பேசினால் ‘நீ ஏன் அதை பேசுகிறாய்?’ என அதிமுக கோபப்படுகிறது..  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் வருவது போல  ‘என்னாச்சி?’ என்கிற குழப்பமே எனக்கு வந்துவிட்டது. அதிமுக, திமுக இரண்டுக்கும் ஒரே ஓனர்தான். இருவரும் கள்ளக் கூட்டணியில் இருக்கிறார்கள்

திமுகவை எதிர்த்து அரசியல் கட்சி தொடங்கியவர் எம்ஜிஆர்.. திமுகவை எதிர்த்து அரசியல் செய்தவர் ஜெயலலிதா மேடம்.. ஆனால் திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க நினைத்தது அதிமுக. அதனால்தான் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அது பிடிக்காமல் நம்முடன் இணைந்தார்கள். இதில் எந்த பேரமும் நடக்கவில்லை. மக்கள் நம் பக்கம் நிற்கும் போது இந்த பேரம் எல்லாம் தேவையில்லை. அவர்கள் சொல்லும் பொய்களை நம்பாதீர்கள்,

திமுகவினர் தங்களுக்கு தெரியாமலே உண்மையை பேசி வருகிறார்கள். திமுக பொதுச்செயலாளர் ஒரு மேடையில் பேசும்போது தமிழ்நாட்டில் மன்னர் பரம்பரை ஆட்சியில் இருந்த போது திமுகதான் அதை முறியடித்தது.. சாதாரண மனிதர்களை ஆட்சி பொறுப்புக்கு கொண்டு வந்தது திமுகதான் என பேசினார்.. அதைத்தான் நாங்களும் செய்திருக்கிறோம்.. மன்னராட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டோம்.

அதிமுக, திமுக இரண்டுமே ஒன்றுதான். எனவே, தவெகவுக்கு வாக்களியுங்கள்.  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு துரோகம் செய்தவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்.. முன்பு இருந்தது அம்மா ஆட்சி.. அடுத்து அப்பா ஆட்சி.. இப்போது நடப்பது பிள்ளைகளின் ஆட்சி’ என அவர் பேசி தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி.. மதுராந்தகம் வெற்றிக்காக தகவலை கசிய விடும் தவெக?