அரசியலிலும் விஜய் நடிகர்தான்!.. நக்கலடித்த ஜெயக்குமார்!.. பதிலடி கொடுத்த செங்கோட்டையன்..
நடிகர் விஜய் கட்சி தொடங்கியது முதலே திமுகவை மட்டுமே விமர்சித்து வந்தார்.. ஒரு கட்டத்தில் அதிமுக பற்றியும் பேச தொடங்கினார்.. அதிமுக ஒரு ஊழல் கட்சி.. பாஜகவின் அடிமையாக மாறிவிட்டது. அந்த கட்சியை வளர்த்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டது அதிமுக என்றெல்லாம் விமர்சித்தார்..
விஜய் எப்ப்டியும் நமது கூட்டணிக்கு வந்து விடுவார் என கணக்குப் பட்டதால் விஜய் பற்றி எந்த விமர்சனமும் செய்யாமல் இருந்த அதிமுக விஜய் இப்படி பேச துவங்கியதும் அவரை திட்ட துவங்கியது. இன்று செய்தியாளிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விஜய் அரசியலிலும் நடிகராகவே இருக்கிறார்.. அவர் பேசும் எதுவும் அவரின் சொந்த வசனம் கிடையாது.. அவர் மேடையில் என்ன பேச வேண்டும் என்பதை ஆதவ அர்ஜுனா, அருண் போன்றவர்கள் எழுதிக் கொடுக்கிறார்கள்.. அதை விஜய் அப்படியே பேசுகிறார் அவ்வளவுதான்.. விஜய்க்கு தில் இருந்தால் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும்..
அதேபோல் ஏழை வீட்டு கல்யாணத்துக்கு விஜய் போக மாட்டார்.. பணக்கார வீட்டு கல்யாணத்துக்கு மட்டும்தான் போவார்.. பல தயாரிப்பாளர்களின் பணத்தில் விஜய் நடித்திருக்கிறார். ஆனால் கஷ்டப்பட்டு தன்னை வளர்த்த தன் தந்தையை ஏன் ஒரு தயாரிப்பாளர் ஆக்கவில்லை.. இப்படிப்பட்ட ஒரு கேவலமான மனநிலை அவருக்கு இருக்கு என பொங்கியிருக்கிறார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த செங்கோட்டையன் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயக்குமாருக்கு கண்டிப்பாக அதிமுகவில் சீட் கொடுக்க மாட்டார்கள்.. வேண்டுமானால் அவர் தவெகவில் சேர்ந்து கொள்ளலாம் என நக்கலடித்திருக்கிறார்..