வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 மார்ச் 2026 (14:40 IST)

யோவ் அட்மின்.. உனக்கு ஓவர் நக்கல்.. விஜயை பங்கம் பண்ணிய சன் நியூஸ்!..

vijay
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் வேகம் காட்டி வருகின்றன. நடிகர் விஜய் கட்சித் துவங்கி இரண்டு வருடம் ஆகிவிட்ட நிலையில் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கொண்டிருக்கிறார். அப்படி நினைத்தாலும் பரவாயில்லை. 2026 தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைக்கும் எனவும் அவர் நம்புகிறார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என நினைக்கும் விஜய் பொதுக்கூட்டங்களில் திமுகவுக்கு எதிராக பேசி வருகிறார். இந்த காலை தஞ்சாவூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்திலும் விஜய் பேசினார். அப்போது காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை பற்றியெல்லாம் உனக்கு என்ன தெரியும்?’ என கேட்கிறார்கள். ரிமோட்லி ஆபரேட்டட் வெக்கிள் மூலம் நீருக்கு உள்ளே சென்று அணையை ஆராய்வது பற்றி கூட நான் படித்திருக்கிறேன். அமைதியாக இருப்பதால் எதுவும் தெரியாதுன்னு நினைச்சிடாதீங்க’ என்றும் பேசியிருந்தார்.

இந்நிலையில், இதை நக்கலடிப்பது போல் சுறா படத்தில் விஜய் கடல் நீரிலிருந்து மேலே வரும் புகைப்படத்தை பதிவிட்டு இந்த செய்தியை பகிர்ந்துள்ளது சன் நியூஸ். ஏற்கனவே சேலத்தில் விஜய் பேசிய போது ‘என்ன பாத்தா மத்தவங்களுக்கு பயப்படுற மாதிரியா இருக்கு?.. மத்தவங்களுக்கு அடங்கி போற மாதிரியா தெரியுது?’ என்ன பேசிய போது தலைவா படத்திற்கு சிக்கல் வந்தபோது  அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்து கையை கட்டிக்கொண்டு விஜய் பேசிய புகைப்படத்தை சன் நியூஸ் பதிவிட்டிருந்தது..\

vijay

இந்த பதிவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து ‘யோவ் சன் நியூஸ் அட்மின்.. உனக்கு ஓவர் நக்கல்’ என பதிவிட்டு வருகிறார்கள்..