1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Divorce Case of Chief Minister Vijay and Wife Sangeetha to Come Up for 3rd Hearing Tomorrow in Chengalpattu Court

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

vijay sangeetha
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான தளபதி விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு, நாளை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. ஒட்டுமொத்த தமிழக அரசியல் மற்றும் திரை உலக வட்டாரத்தில் இந்த செய்தி தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
ஏற்கனவே இருமுறை இந்த விவாகரத்து மனு மீதான விசாரணைகள் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், தற்பொழுது 3-வது முறையாக இந்த வழக்கு நாளை விசாரணை பட்டியலுக்கு வருகிறது. முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா தம்பதியினருக்கு இடையே ஏற்பட்டுள்ள குடும்ப கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த விவாகரத்து வழக்கு தொடரப்பட்டதாக கூறப்படுகிறது.
 
மிகவும் முக்கியமான அரசியல் பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான இந்த விவகாரம், நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
நாளை நடைபெறும் இந்த 3-வது கட்ட விசாரணையின் போது இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தின் அடுத்தகட்ட உத்தரவு என்னவாக இருக்கும் என்பதை அறிய ஒட்டுமொத்த தமிழகமும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஒரு பெரிய தலைவரை மிஸ் பண்ணிட்டோம்!.. பெரிய கனவு இருந்தது!.. லதா ரஜினிகாந்த் பேட்டி..