1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk candidates list for assembly election is ready

234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் ரெடி!.. வேகம் காட்டும் தவெக!...

tvk vijay
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய்.. தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.. வருகிற சட்டமன்ற தேர்தல் இந்த கட்சி சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தலாகும். அடிப்படையில் விஜய் மக்களிடம் பிரபலமான ஒரு நடிகர் என்பதால் அவர் கணிசமான வாக்குகளை வாங்குவார் எனக்கு கணிக்கப்படுகிறது.. குறிப்பாக இளைஞர்களின் வாக்குகளை விஜய் வாங்குவார் என பலரும் நம்புகிறார்கள்.. சில கருத்துக்கணிப்புகள் விஜய் 18 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை வாங்குவார் என சொல்கிறது..

அதேநேரம் வெற்றிக்கு தேவையான கூட்டணியை விஜய் இதுவரை அமைக்கவில்லை.. கடைசி நேரம் வரை காங்கிரஸ் தங்களுடன் வரும் என எதிர்பார்த்தார் விஜய்.. ஆனால் காங்கிரஸோ தவெகவுக்கு போய் விடுவோம் என சொல்லி சொல்லியே திமுகவிடம் 28 தொகுதிகளை வாங்கிக்கொண்டு அந்த கூட்டணியில் இணைந்து விட்டது..

எனவே, விஜய் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.. ஆனாலும் தேர்தல் பணிகளில் அவர் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தவெக உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாராகி விட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் அவர்களிடம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை விஜய் இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது..
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலையின் பின்னணியில் சதியா? பல வருட திட்டமா?