வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 மார்ச் 2026 (19:25 IST)

ரேஷன் கடையில் பெண்களுக்கு தனி எடையாளர்!.. விஜயை வச்சு செய்யும் நெட்டிசன்கள்...

vijay
தவெக தலைவர் விஜய் இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.. வழக்கம்போல் 20 நிமிடங்களுக்கும் குறைவாக  பேசியிருந்தார்.. அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். சிறு குழந்தைகள் கூட ‘ஓம் சக்தி.. பராசக்தி.. திமுக ஒரு தீய சக்தி என சொல்கிறது.. தவெக வந்த பின் முதல்வர் முக ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது..

அதிமுகவும் திமுகவும் ஒரு டீலிங்கில் இருக்கிறார்கள்.. மக்களை நாம் மட்டுமே ஏமாற்ற முடியும்.. நாம் இருவர் மட்டுமே கொள்ளையடிக்க வேண்டும்.. புதிதாக யாரையும் உள்ளே விடக்கூடாது என நினைத்து இருவரும் என்னை காலி செய்ய நினைக்கிறார்கள் என பேசினார்.. அதேபோல் தவெக சார்பில் சில தேர்தல் வாக்குறுதிகளையும் அவர் வெளியிட்டிருந்தார். அதில் ஒன்றுதான் ரேஷன் கடைகளில் ஆண்களுக்கு என தனி எடையாளர், பெண்களுக்கு என தனி எடையாளர் நியமிக்கப்படும் என்று கூறியிருந்தார்..

இதுதான் இப்போது ட்ரோலில் சிக்கியிருக்கிறது... ஏனெனில் ரேஷன் கடையில் பொருட்களை எடை போட்டு கொடுப்பதற்கு ஒரே ஒருவர் போதும். ஆண்களுக்கு என்று ஒருவர், பெண்களுக்கு தனியாக் ஒருவர் எல்லாம் தேவையில்லை என்கிறார்கள் பலரும்.. இப்படி ஒரு ஐடியாவை விஜய்க்கு கொடுத்தது யார் என்று தெரியவில்லை.. விஜய்க்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுப்பவர்கள் யோசிக்க வேண்டும்.. என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்..