வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: புதன், 4 மார்ச் 2026 (13:06 IST)

பயிர்க்கடன் ரத்து!. தஞ்சாவுர் கூட்டத்தில் விஜய் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள்!..

vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தஞ்சாவூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது சில தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்.

உரத்தட்டுப்பாடு இல்லாமல் உறுதி செய்யப்படும்.  

5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்கடன் முழுமையாக ரத்து.

5 ஏக்கருக்கு மேல் நிலமுள்ள விவசாயிகளின் பயிர்கடன் 50% வரை ரத்து செய்ய சாத்தியக்கூறு ஆராயப்படும்.  

2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்களின் குழந்தைகளுக்கு அனைத்து உயர் கல்வி செலவும் அரசு ஏற்கும்  (Engineering, Medical உட்பட).[ஒன்றிய, மாநில அரசு வேலைகளில் அவர்களது பெற்றோர் இல்லாத பட்சத்தில்]

விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டமும் மாநிலத்தில் அனுமதிக்கப்படாது.  

நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் போதுமான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

கொள்முதல் நிலையங்களில் கமிஷன் வசூல் முழுமையாக தடுக்கப்படும்.  

500 ரேஷன் கார்டுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும்.  

ரேஷன் கடைகளில் அரிசி தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் பாக்கெட் செய்து வழங்கப்படும்.  

மீனவர்களின் பாதுகாப்புக்காக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.  

கல்வி, மருத்துவம், ரேஷன், குடிநீர், சாலை, பஸ் போன்ற அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை.  
அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க நடவடிக்கை.

ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சி.