டாஸ்மாக் தனியார் மயம் ஆகுமா?.. மதுவிலக்குத்துறை அமைச்சர் சொல்வது என்ன?..
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தவுடன் பெண்கள் பாதுகாப்பு, 717 டாஸ்மாக் கடைகளை மூடுவது, போதை மருந்து தடுப்பு தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது. டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்குள் மூடி விட வேண்டும், கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யக்கூடாது, பாட்டிலுக்கு 10 ரூபாய் சேர்த்து வாங்க கூடாது என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியானது.
ஆனால் பாட்டிலுக்கு பத்து ரூபாய் சேர்த்து வாங்குவதை டாஸ்மாக் ஊழியர்கள் நிறுத்தவில்லை. அதற்கு பல காரணங்களும் சொல்லப்பட்டது. இதையடுத்து பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களுக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே மோதல் எழுந்தது. இதையடுத்து சென்னை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை மூடிவிட்டு போராட்டம் நடத்தும் வரை சென்றது.
ஒருபக்கம், மதுபானங்களை விற்பனை செய்யும் மது உற்பத்தி நிறுவனங்களிடம் ஒரு பெட்டிக்கு இவ்வளவு தொகை என்பதை கட்சி நிதி என்கிற பெயரில் மாசம் 100 கோடி ரூபாய் வாங்கி வந்தது தெரியவந்தது. தற்போது அந்த தொகை தமிழக அரசின் கணக்குக்கு செல்லுமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
ஒருபக்கம் டாஸ்மாக்கை தனியார் மயமாக மாற்றும் எண்ணம் தமிழக அரசுக்கு இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுபற்றி கருத்து தெரிவித்த மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக்கை தனியார் மயம் ஆக்கினால் எப்படி இருக்கும்? ஏன் தனியார் மையம் ஆக்காமல் இருந்தார்கள்? என்பதை இப்போதுதான் ஆய்வு செய்து வருகிறோம். டாஸ்மாக்கில் சம்பாதித்துதான் அரசை நடத்த வேண்டும் என்ற எண்ணம் ஒரு சதவீதம் கூட முதலமைச்சருக்கு இல்லை என்று கூறியிருக்கிறார்.