1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. CBSE Informs Supreme Court: Policy Underway to Declare Class 12 Results for Private Students in Gulf Countries

வளைகுடா நாட்டு தனித்தேர்வர்களுக்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவு
மேற்கு ஆசிய பகுதியில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, வெளிநாடுகளில் உள்ள சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து புதிய கொள்கை ஒன்று ஆலோசிக்கப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
வளைகுடா நாடுகளில் வசிக்கும் சிபிஎஸ்இ மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றத்தில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலித்து வருவதால் இந்த விசாரணையை ஜூன் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு கோரினார். 
 
மேற்கு ஆசிய பிராந்திய நெருக்கடி காரணமாக, கடந்த மார்ச் மாதம் பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 10, 2026 வரை நடக்கவிருந்த 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
 
சவுதி அரேபியாவை சேர்ந்த பிரான்சு ஜிகர்குமார் படேல் என்ற தனித்தேர்வர், தனது தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மேல்படிப்பு வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு சிபிஎஸ்இ தரப்பில், பள்ளிகள் மூலம் மதிப்பீடு செய்ய வேண்டிய தரவுகள் தனித்தேர்வரான மனுதாரருக்கு இல்லாததால் முடிவு தாமதமாவதாக தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலால் பாதிக்கப்பட்ட அனைத்து வளைகுடா நாட்டுத் தனித்தேர்வர்களுக்கும் விரைவில் புதிய கொள்கை மூலம் தீர்வு காணப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
டாஸ்மாக் தனியார் மயம் ஆகுமா?.. மதுவிலக்குத்துறை அமைச்சர் சொல்வது என்ன?..