வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: புதன், 4 மார்ச் 2026 (12:55 IST)

விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்தவர் விபத்தில் பலி?.. இதுக்கு இல்லையா எண்டு!...

vijay
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.. சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து வேன் மூலம் அவர் தஞ்சாவுக்கு சென்றார்.

வழக்கம் போல 20 நிமிடங்களுக்கும் குறைவாக பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.. ஓம் சக்தி.. பராசக்தி.. திமுக ஒரு தீய சக்தி என சிறுவர்களே சொல்கிறார்கள்.. திமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது என்றெல்லாம் பேசினார்..

ஒருபக்கம் விஜயின் வாகனம் செல்லும் போது அவரின் வாகனத்திற்கு முன்பும், பின்னும் மற்றும் இரு புறத்திலும் இரு சக்கர வாகனங்களில் விஜய் ரசிகர்களும், தவெகவினரும் பின்தொடர்ந்து செல்கிறார்கள். இப்படி செய்யவேண்டாம் என தவெக சொல்லியும் அவர்கள் நிறுத்தவிலலி. வேலூரில் பேசிய போது கூட விஜய் இதை ஒரு கோரிக்கையாக வைத்தார்.. ஆனாலும் அவரின் ரசிகர்களும், தவெக தொண்டகளும் இதை கேட்பதில்லை..

இன்றும் கூட திருச்சியில் இருந்து அவர் வேன் மூலம் தஞ்சாவூருக்கு விஜய் சென்றுகொண்டிருந்த போது அவரின் வேனை சுற்றி விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்கள்.. அப்போது ஒரு வண்டியின் மீது மற்றொரு வண்டி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் கீழே விழுந்தார்..

அதில், அவரின் தலையில் அடிபட்டு ரத்தம் கசிந்தது.. அவரை ஆம்புலன் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற தகவல் வெளியாகவில்லை. அதுபோல் ஒரு இளைஞருக்கு காலில் பலத்த அடி ஏற்பட்டிருக்கிறது.. அவரையும் மருத்துவமனைக்கு கூட்டி சென்றிருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோஸ் பரவி வருகிறது..