1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sellur raju talk agasint cm vijay

நீயே களவாணி!.. நீயெல்லாம் பேசுறியா?!.. விஜயை விளாசிய செல்லூர் ராஜு!..

sellur raju
சமீபத்தில் கரூரில் பேசிய முதல்வர் விஜய் ‘அதிமுக, திமுக இரண்டுமே கூட்டுக் களவாணிகள்தான்’ என பேசியிருந்தார். இது அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று மதுரையில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்’ என வாத்தியார் பாடியிருக்கிறார். ஆனால் இப்போதுள்ள முதலமைச்சருக்கு பணிவே இல்லை.  சட்டசபையில் ஏதேதோ பேசுகிறார்.. சைகையெல்லாம் காட்டுகிறார்... எங்களை கூட்டு களவாணிகள் என்கிறார்..

இவரே பெரிய களவாணிதான்.. புலி படத்தில் வாங்கி சம்பளத்தை மறைத்து அதன் பின் அதை வருமானத் துறை கண்டுபிடித்ததால் வரி கட்டினார்.. அதேபோல் வெளிநாட்டிலிருந்து கார் இறக்குமதி செய்து அதற்கு வரி கட்டாமல் ஏமாற்றி பின்னர் அது நீதிமன்றத்திற்கு சென்ற பின் வரி கட்டினார்.. இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இவர் யோக்கியனா? இவரே பெரிய களவாணிதான்..

ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா, முக ஸ்டாலின் போன்றவர்கள் இருந்த இருக்கையில் இப்படி ஒரு முதலமைச்சர் வந்து அமர்ந்திருக்கிறார். தவெக அரசு நீண்ட நாளைக்கு நிலைக்காது விரைவில் முடிவுக்கு வரும்’ என அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் பணியிட மாற்றம்!. தவெக அரசு அதிரடி..