தொடர்புடைய செய்திகள்
- திராணி இருந்தா நேரில் ஆஜராகணும் மிஸ்டர் க்ளீன்!.. செந்தில் பாலாஜிக்கு தவெக பதிலடி!...
- விஜயின் முதுகுதான் கரூர் நினைவுச் சின்னம்!. கலாய்க்கும் திமுக!...
- இப்ப போலீஸ் உங்க கையில்தான இருக்கு.. கண்டுபிடிங்க!.. விஜயை விளாசும் அமீர்!...
- கரூரில் விஜய் பிரச்சாரம்!.. இடைத்தேர்தலுக்கு தடை விதித்த நீதிமன்றம்!..
- போலீஸ் எச்சரிக்கைவில்லை என விஜய் சொன்னது பொய்!.. திமுக ஐடி விங் பகிர்ந்த வீடியோ!...
இனிமே அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்தான்!.. ஒன்றிய அரசு அறிவிப்பு!...
தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் முதலில் தேசிய கீதம் ஒலிப்பதை திமுக கடுமையாக எதிர்த்தது. சட்டசபையில் ஆளுநர் உரையின்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒழிக்கப்பட்டால் ஆளுநர் கோவித்துக் கொண்டு வெளியே போய் விடுவார்.. இது பலமுறை நடந்திருக்கிறது.. ஆனால், திமுக அதை விட்டுக்கொடுக்கவில்லை.
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தபின் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவில் முதலில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. இதை திமுக கடுமையாக விமர்சனம் செய்தது. தமிழக உரிமையை தவெக விட்டுக் கொடுத்து விட்டது.. பாஜகவுக்கு விஜய் பணிந்துவிட்டார் என்றெல்லாம் பேசியது.
இதையடுத்து, அரசு விழாவில் முதலில் மாநில பாடலை ஒலிக்க அனுமதிக்க வேண்டுமென தமிழக முதல்வர் விஜய் டெல்லி சென்றிருந்தபோது பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தார்
. தமிழக அமைச்சரவை நியமனம் செய்யப்பட்டபோது முதலில் தமிழ்த்தாய் ஒலிக்கப்பட்டு, இரண்டாவதாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. இதையும் திமுக கையில் எடுத்து விமர்சனம் செய்தது..
இந்நிலையில், தற்போது ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலில் அரசு விழாக்களில் மாநில பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதாவது முதலில் மாநில பாடல்.. அதைத்தொடர்ந்து தேசிய பாடல்(வந்தே மாதரம்).. இறுதியாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும்.. தேசிய பாடல் மற்றும் தேசிய கீதத்தை பாடும்போது அதன் அசல் வரிகள், சரியான உச்சரிப்பு முறைகளை துல்லியமாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் மாநில பாடல் என்பதை வரவேற்றாலும் அதைத் தொடர்ந்து உடனடியாக தேசிய பாடல் பாடப்பட வேண்டும் என்பதை திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்காது. தவெக இதை எப்படி சமாளிக்க போகிறது என்பது தெரியவில்லை.