1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mr vijayabaskar denied the complaint aboutt dmk

தவெகவில் சேர சொல்லி யாரும் அழுத்தம் தரவில்லை!.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி!..

mr vijaya baskar
தவெக ஆட்சி அமைந்தவுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் தொடர்ந்து தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது தொடர் கதையாகிவிட்டது. இதுவரை மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி சத்யபாமா, விராலிமலை தொகுதி சி.விஜயபாஸ்கர், கரூர் தொகுதி எம் ஆர் விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்..

இதையடுத்து, மற்ற கட்சிகளிடமிருந்து எம்.எல்.ஏக்களை இழுத்து தவெக குதிரை பேரம் செய்கிறது என அதிமுகவும், திமுகவும் தொடர்ந்து புகார் சொல்லி வருகிறது.இது தொடர்பாக ஆளுநரிடமும் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர் ‘நாங்கள் அதிமுக தலைமையின் மீது அதிருப்தியில் இருந்தோம்.. அந்த நேரத்தில் தவெகவிலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது.. எனவே அந்த கட்சியில் இணைந்து விட்டோம்’ எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து ‘தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டிருப்பதை எம்.ஆர் விஜயபாஸ்கரை ஒப்புக்கொண்டிருக்கிறார். எனவே, தவெக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரளிக்க திமுக திட்டமிட்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர் விஜயபாஸ்கர் ‘நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள்.. தவெகவிலிருந்து எங்களுக்கு யாரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.  நாங்களாக விரும்பியே தவெகவில் இணைந்தோம்’ என்று கூறியிருக்கிறார்.