தொடர்புடைய செய்திகள்
- திடீரென டெல்லி வந்த சீன பிரமுகர்கள்.. ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனையா?
- விஜய் பிரிக்கிறது எல்லாமே திமுக ஓட்டு.. எனவே பாஜகவால் விஜய்க்கு எந்த பிரச்சனையும் வராது: அரசியல் விமர்சகர்..!
- டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறாரா ஜிவி பிரகாஷ்? என்ன காரணம்?
- பிரதமர் மோடி 23தமிழகம் வருகை.. மதுரையில் இருந்து சென்னைக்கு கூட்டம் மாற்றம்..!
- நான் நடிச்ச மொத்த சீனையும் சென்சார் தூக்கிட்டாங்க!.. சீமான் புலம்பல்!...
காலை வெட்டுவீங்களா?!.. இது ரொம்ப தப்புங்க!.. அண்ணாமலைக்கு ஆதரவாக சீமான் கருத்து!....
மும்பை மாநகராட்சிக்கான தேர்தல் வருகிற 15ம் தேதி நடைபெறும் நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன்பு தமிழர்கள் வாழும் பகுதிக்கு சென்று பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டுமில்லை அது ஒரு சர்வதேச நகரம் என்று பேசியிருந்தார். அவரின் அந்த பேச்சு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே அண்ணாமலையை மிகவும் கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாட்டிலிருந்து வந்த உனக்கும் இந்த நிலத்திற்கும் என்ன தொடர்பு?.. லுங்கி கட்டிக்கொண்டு மகுடி வாசி.. மதுரை மும்பைக்குள் வந்தால் உன் காலை வெட்டி விடுவேன் என்று பேசியிருந்தார்.
அதேபோல் அண்ணாமலையை விமர்சித்து பேசிய உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே அண்ணாமலை பாஜகவில் தோற்றுப் போன ஒருவர்.. அவரால் டெபாசிட் கூட பெற முடியவில்லை ஆனால் பிரதமரை போல பேசிக் கொண்டிருக்கிறார் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில்தான் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் சீமான் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மும்பை நகரம் குறித்து பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து.. அதை ஏற்பதும் எதிர்ப்பதும் அவரவர் ஜனநாயக உரிமை.. ஆனால் மும்பைக்கு வந்தால் கால்களை வெட்டுவேன் என்று சொல்வதை ஏற்கமுடியாது என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.