1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 ஜனவரி 2026 (08:40 IST)

பிரதமர் மோடி 23தமிழகம் வருகை.. மதுரையில் இருந்து சென்னைக்கு கூட்டம் மாற்றம்..!

பிரதமர் மோடி 23தமிழகம் வருகை.. மதுரையில் இருந்து சென்னைக்கு கூட்டம் மாற்றம்..!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் ஜனவரி 23-ம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபடி, மதுரையில் நடைபெறவிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தற்போது திடீரென சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் சில தவிர்க்க முடியாத நிர்வாக சூழல்கள் காரணமாகவே இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமரின் இந்த வருகை அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. சென்னையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பாஜகவின் தேர்தல் வியூகங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
குறிப்பாக, டெல்லியில் தவெக தலைவர் விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ள சூழலில், பிரதமர் தமிழகத்தில் ஆற்றப்போகும் உரை மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
Edited by Siva