நான் நடிச்ச மொத்த சீனையும் சென்சார் தூக்கிட்டாங்க!.. சீமான் புலம்பல்!...
சமீபகாலமாகவே திரைப்படங்கள் தொடர்பாக சென்சார் அதிகாரிகள் கடுமையான கெடுபிடிகளை காட்டி வருகிறார்கள். இது படைப்பு சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என இயக்குனர்கள் பொங்கி வருகிறார்கள். ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கியதாலேயே ரிலீஸ் ஆகாமல் போனது.
அதேபோல், சுதாகொங்காரா இயக்கத்தில் உருவான பராசக்தி படத்தில் பல முக்கிய வசனங்களை மாற்ற சொல்ல நெருக்கடி கொடுத்தது சென்சார். 25 இடங்களில் மாற்றம் செய்தபின்னர்தான் இந்த படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜனநாயகன் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து அதில் சென்சார் சான்றிதழ கிடைக்காமல் தற்போது உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறது பட தயாரிப்பு நிறுவனம்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து.. தீர்வு வந்து.. ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் என்பது யாருக்கும் தெரியவில்லை.. ஒருபக்கம் பிப்ரவரியில் தேர்தல் தேதி அறிவித்து விட்டால் ஜனநாயகன் படம் தேர்தலுக்கு பின்னரே வெளியாகும் என சொல்லி சிலர் பீதி கிளப்புகிறார்கள்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் சீமான் நான் அடங்காதே என்கிற ஒரு படத்தில் நடித்தேன். என் தம்பி சண்முகம் இயக்கியிருந்தார்.. ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.. அந்த படத்தை சென்சார் 500 இடங்களில் வெட்டிவிட்டார்கள்.. அந்த படத்தில் நான் சில காட்சிகளில் எடுத்தேன்.. எல்லா காட்சிகளையும் வெட்டிவிட்டார்கள் என்று புலம்பியிருக்கிறார்.