டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறாரா ஜிவி பிரகாஷ்? என்ன காரணம்?
டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களின் இல்லத்தில் வரும் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் திருநாள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவின் சிறப்பம்சமாக, பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழர்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில் நடத்தப்படும் இந்த விழாவில், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.
இவ்விழாவில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மற்றும் முக்கிப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். தலைநகர் டெல்லியில் தமிழ் இனத்தின் பெருமையை எடுத்துரைக்கும் விதமாக தொடர்ந்து நடத்தப்படும் இந்த பொங்கல் விழா, அரசியல் மற்றும் கலைத் துறையினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரின் வருகை இந்த விழாவிற்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளித்துள்ளதோடு, டெல்லி வாழ் தமிழர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva