1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. reporter mani said this will destroy tvk

இது தப்பு!.. தவெகவுக்கு சரிவு ஆரம்பிக்குது!.. பத்திரிக்கையாளர் மணி சொல்றத கேளுங்க!..

mani vijay
026 தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என சொல்லி வந்தவர் பத்திரிக்கையாளர் மணி. கரூர் சம்பவத்தில் கூட அவர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தார். ஆனால், பிரச்சாரத்த்ன் போது விஜய்க்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பை பார்த்தபின் தனது மன நிலையை அவர் மாற்றிக் கொண்டார்.

அதோடு 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சரான பின் அவரின் நடவடிக்கைகளை பத்திரிக்கையாளர் பணி தொடர்ந்து பாராட்டி பேசி வருகிறார். விஜய் மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.. சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறார். திமுகவால் விஜயை சமாளிக்க முடியவில்லை. இனிமேல் திமுகவுக்கு எதிர்காலம் இல்லை.. தவெகவுக்கு எதிராக திமுக எதாவது செய்தால் இன்னும் பல இடங்களில் தோற்பார்கள் என்றும் தொடர்ந்து பேசி வருகிறார் பத்திரிக்கையாளர் மணி.

ஒருபக்கம், சட்டசபையில் விஜயை தவெக எம்எல்ஏக்கள் மிகவும் அதிகமாக புகழ்ந்து பேசி வருகிறார்கள். சமீபத்தில் சட்டசபையில் பேசிய ஆதவ் அர்ஜுனா ‘தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும்’ என பேசியிருந்தார்.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர் மணி ‘விஜயை பிரதமராக்கும் நோக்கத்தோடு ஆதவ் அர்ஜுனா  பேசியிருக்கிறார். இதற்கு பெயர் முகஸ்துதி.. இனி ஆளாளுக்கு துதி பாடுவார்கள்.  இதிலிருந்து தவெகவின் சரிவு தொடங்கும்.. இப்படித்தான் ஜெயலலிதாவுக்கும் செய்தார்கள்.. எப்படி ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக கரைந்து காணாமல் போனதோ அதே நிலைமைதான்’ என சொல்லியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பாஜக பக்கம் சாயும் திமுக!.. இதுவே சாட்சி!.. சி.டி.நிர்மல்குமார் பேட்டி...