1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Media Excluded from Chief Minister Vijay's Investors Meet in Chennai, Causing Stir

முதல்வர் விஜய் தலைமையீல் வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு.. ஊடகங்களுக்கு அழைப்பு இல்லை..

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் தனியார் ஓட்டலில் 'வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு' நடைபெற்று வருகிறது. இதில் பல முக்கிய தொழில் அதிபர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆனால், இந்த மாநாட்டிற்கு ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற செய்தி ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
முந்தைய காலங்களில் நடைபெற்ற இதுபோன்ற முதலீட்டாளர் மாநாடுகளில் அனைத்து ஊடகங்களுக்கும் முறையான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊடகங்கள் புறக்கணிக்கப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள அரசு அதிகாரிகள், இது முழுக்க முழுக்க முதலீட்டாளர்கள் மட்டுமே பங்கேற்கும் பிரத்யேகக் கூட்டம் என்பதால் ஊடகங்களுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். 
 
இதற்கிடையே, முதல்வர் விஜய் ஊடகங்களை சந்திப்பதில்லை என்ற ஏற்கனவே உள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தற்போது அரசு நிகழ்ச்சி ஒன்றுக்கே ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
 
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
திமுக மாநாட்டிற்காக ஏரியில் மண் அள்ளிய விவகாரம்... எவ வேலு, மகன் மீது புகார்..