கே.என்.நேரு இடங்களில் திடீர் சோதனை ஏன்?.. பின்னணி இதுதானா?...
திமுக முன்னாள் அமைச்சர் கே.என் நேரு தொடர்பான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சி, கோவையில் 19 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆட்சியில் நகராட்சி, நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைகள் தொடர்பான டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாக சொல்லப்படுகிறது..
குறிப்பாக கட்டடம் கட்டுதல், கழிப்பறை அமைத்தல், ஹவுஸ் சோரிஸ் அடிப்படையில் பணியாளர்கள் நியமனம், குடிநீர் திட்ட பணிகளுக்கான டெண்டர்கள் ஆகியவற்றில் ரூ.1020 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.
ஒவ்வொரு டெண்டருக்கும் 7.5 முதல் 10 சதவீதம் வரை தரப்பட்டதாகவும், ஒப்பந்ததாரர்களிடம் 20 முதல் 25 சதவீதம் வரை அமலாக்கத்துறை புகார் கூறியிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் லஞ்ச ஒழிப்பு துறை புதிதாக வழக்குப் பதிவு செய்து கே.என் நேருக்கு தொடர்பான இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
அதோடு, திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல்களை அம்பலப்படுத்தி சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜோசப் விஜய் கறாராக உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.