100 நாள் தவெக ஆட்சி!.. திமுக செயல்பாடு எப்படி இருக்கு?!.. வெளியான கருத்துக்கணிப்பு!...
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த திமுக தற்போது எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர்ந்திருக்கிறது.. அதிலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வி பெற்றது அக்கட்சியை நிலைகுலை செய்திருக்கிறது..
ஒருபக்கம் அப்பாவை காணோம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டசபையில் நக்கலடித்த வீடியோ வைரலாகி திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சட்டசபையில் ஒவ்வொரு நாளும் தவெக அமைச்சர்களுக்கும், திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோருக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆட்சியில் நீங்க செய்த தவறுகளால்தான் ஊழல் அதிகரித்தது.. அதை நாங்கள் சரி செய்ய முயற்சி செய்து வருகிறோம் என தவெக அமைச்சர்கள் கூற திமுக எம்.எல்.ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் அடிக்கடி சட்டசபையில் வாக்குவாதங்கள் எழுகிறது.
இந்நிலையில்தான், தவெக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் எதிர்க்கட்சியான திமுகவின் செயல்பாடு எப்படி இருக்கிறது என சமீபத்தில் மக்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 34.46 சதவீதம் பேர் திமுகவின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். மேலும் 28.28 சதவீதம் பேர் நன்றாக இருக்கிறது எனவும், 22.02 பேர் சுமார் எனவும், 10.72 பேர் மிகவும் நன்றாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்..