1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn govt suspeneded 40 tasmac supervisors

ஒரே நாளில் 40 டாஸ்மாக் சூப்பர்வைசர்ஸ் சஸ்பெண்ட்!.. தமிழக அரசு அதிரடி!...

tasmac
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தது முதலே டாஸ்மாக் துறையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதலில் பள்ளிகள், கோவில்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகே இருந்த 707 மதுபானக்கடைகள் மூடப்பட்டது..

அதேபோல், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக கடந்த பல வருடங்களாகவே புகார் இருக்கிறது.  அதை தடுக்கும் முயற்சியிலும் தவெக அரசு இறங்கியிருக்கிறது. அதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அதை முழுதாக தடுக்க முடியவில்லை. இந்நிலையில்தான் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கூடுதல் விலைக்கு மதுவை விற்ற 157 டாஸ்மாக் ஊழியர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்..

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 136 கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், டாஸ்மாக் கடையின் வாடகை மற்றும் மின் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளை தமிழக அரசே ஏற்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்கிய டாஸ்மாக் ஊழியர்களின் சஸ்பெண்டுக்கு எதிராக மதுக்கடைகளை மூடிய 40 சூப்பர்வைசர்களை டாஸ்மாக் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கே.என்.நேரு இடங்களில் திடீர் சோதனை ஏன்?.. பின்னணி இதுதானா?...