1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rangaraj pandey talk about vijay tvk

திமுக அப்ப இனிச்சது.. இப்ப கசக்குதா?!.. விஜயை பொளக்கும் ரங்கராஜ் பாண்டே!..

pandey
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலிருந்தே திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக ஊழல் கட்சி, திமுக ஒரு தீய சக்தி, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். என்னை வெளியே வா என கூப்பிடுகிறாரக்ள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் விஜய் வெளியே வந்து ஓட்டு போடுவான். உங்கள் ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்’ என்றெல்லாம் சொல்லி வருகிறார்.

ஒருபக்கம் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் 40 சதவீத வாக்குகளை வாங்குவார்.. விஜய்தான் அடுத்த முதல்வர் என்றெல்லாம் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஒருபக்கம் கருத்துக்கணிப்பை சொல்லி வருகிறார்கள்..

இந்நிலையில்,ஊடகம் ஒன்றில் பேசிய செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே ‘ஒருமுறை தேர்தல் சமயத்தில் கருப்பு சிவப்பு கலர் அடித்த சைக்கில் போய் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தாரே விஜய்.. அப்போது திமுக தீயசக்தி என விஜய்க்கு தெரியவில்லையா?.. விஜய் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தார் என விஜய் இருந்த மேடையிலேயே ஆதவ் அர்ஜுனா பேசினாரே!...

விஜய் அதை ஒப்புக்கொண்டதாகத்தானே அர்த்தம்.. அப்போது திமுக இனித்தது.. இப்போது கசக்கிறதா?.. அப்போதெல்லாம் எப்படி விஜய் திமுகவை ஆதரித்தார்?.. மக்கள் எல்லாம் தவெகவுக்கு ஓட்டு போடுவார்கள் என்றால் திமுக, அதிமுக எல்லாம் வீட்டுக்கு போய்விடுமா?.. விஜய் மட்டுமே 40 சதவீதம் வாக்கு வாங்குவார் என்றால் திமுக, அதிமுகவுக்கு ஆந்திர மக்களா ஓட்டு போட போகிறார்கள்?.. எதுவும் புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. விஜய் கொஞ்சம் வாக்கு வாங்குவார். ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் முதல்வராக வாய்ப்பே இல்லை’ என அவர் கூறியிருக்கிறார்..
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஜய்க்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததா? நீதிபதி சொன்னது என்ன?