1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rp udhyakumar talk about tvk vijay

நாங்க பேசினா விஜய் வெளியே வரமுடியாது!.. ஆர்.பி.உதயகுமார் பேட்டி...

vijay
நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவங்கியதில் இருந்தே திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சித்து வந்தார்.. எனவே அவர் அதிமுக கூட்டணிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எந்த கட்சிக்கும் செல்லவில்லை. அதோடு மற்ற கட்சிகள் கூட்டணியைத் தேடி தன்னுடைய பக்கம் வரும் என அவர் எதிர்பார்த்தார்.

ஆனால் அது நடக்கவில்லை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை அமைத்துவிட்டன. ஒருபக்கம், சமீபகாலமாகவே அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளையும் விஜய் விமர்சிக்க துவங்கியிருக்கிறார். அதிமுகவை அடிமை ஊழல் கட்சி என்று விமர்சித்தார்.. மேலும் பாஜகவிடம் அடிமுக அடிமையாக இருப்பதாகவும் மேடைகளில் பேசி வருகிறார்..

எனவே விஜயின் கருத்துக்கு அதிமுகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.. சமீபத்தில் கூட செய்தியாளிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘விஜய்க்கு ஒன்றுமெ தெரியவில்லை.. வீட்டில் இருந்து கொண்டு எதையோ பேசி வருகிறார்.. அதிமுகவிடம் எந்த ஊழலும் இல்லை.. ஊழல் கட்சி என்று சொன்னபோது அவர் அதிமுக என குறிப்பிடவில்லை.. அதிமுக ஊழல் கட்சி என்று சொன்னால் நாங்கள் பதில்டி கொடுப்போம்’ என சொல்லியிருந்தார்..

இந்நிலையில், செய்தியாளரிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் ‘தமிழக வெற்றிக் கழகத்தை விட கடுமையான விமர்சனங்களை முன்வைக்க எங்களுக்கு தெரியும். நாங்கள் விமர்சித்தால் விஜய் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. அடிப்படை கட்டமைப்பு இல்லாத கட்சி தவெக’ என்ன கூறியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ‘விஜய் அதிமுக கூட்டணிக்கு வரவில்லை என்றால் தவெகவை திமுக அழித்துவிடும்’ என ஆர்பி உதயகுமார் பேசியது குறிப்பிடத்தக்கது..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தவெக தேர்தல் அறிக்கை!.. பொதுமக்கள் கருத்து கேட்பு!.. முடங்கிய தவெக இணையதளம்...