1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. judgement in vijay salary case tomorrow

விஜய் வருமானத்தை மறைத்த வழக்கு!.. நாளை வெளியாகிறது தீர்ப்பு...

vijay
நடிகர் விஜய் அரசியல்வாதியாக மாறி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு வருடங்களில் மூன்று பொதுக்கூட்டங்களில் விஜய் பேசியிருக்கிறார். மேலும் மக்கள் சந்திப்பு என்கிற பெயரில் சில மாவட்டஙக்ளில் பேசியிருக்கிறார்.அதேநேரம் ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட அவர் நடத்தியதில்லை. ஒரு பேட்டியும் கொடுத்ததில்லை செய்தியாளர்களை பார்ப்பதற்கு பயப்படுகிறார் விஜய் என பலரும் ஒரே விமர்சனம் செய்து வருகிறார்கள்

ஆனால் அவரோ ‘என்னை வெளியே வா என்று கூப்பிடுகிறார்கள்.. ஆனால் தேர்தல் வரும்போது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் விஜய் வெளியே வருவார்’ என்று பன்ச் டயலாக் பேசி வருகிறார். இதையடுத்து விஜய் சினிமாவில் பேசுவது போலவே இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார். அரசியல் என்பது சாதாரண விஷயம் அல்ல.. அதை சரியாக செய்ய வேண்டும்.. விஜய்க்கு அரசியல் தெரியவில்லை என அரசியல் விமர்சிகர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்..

சமீபத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லிக்கு சென்று விசாரணையில் விஜய் கலந்து கொண்டார். இந்நிலையில்தான், நாளை ஒரு முக்கிய தீர்ப்பு வெளியாகவிருக்கிறது.
புலி படத்தில் விஜய் நடித்த போது அவர் பெற்ற சம்பளத்தை கணக்கில் காட்டாமல் மோசடி செய்தார் என வருமான வரித்துறை பல வருடங்களுக்கு முன்பெ விஜய்க்கு 1.50 கோடி அபராதம் விதித்தது..

ஆனால் இதை எதிர்த்து விஜய் வழக்கு தொடர்ந்தார்.. நாளை இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது.விஜய் அரசியல்வாதியாகிவிட்ட நிலையில் இந்த தீர்ப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நாங்க பேசினா விஜய் வெளியே வரமுடியாது!.. ஆர்.பி.உதயகுமார் பேட்டி...