வருமானத்தை மறைத்த வழக்கு!. விஜய்க்கு 1.50 கோடி அபராதம் செல்லும்!.. நீதிமன்றம் அதிரடி....
சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி உள்ளிட்ட பலரும் நடித்து 2015ம் வருடம் வெளியான திரைப்படம் புலி. இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களையே கவரவில்லை. ஒருபக்கம் இந்த படம் வெளியானபோது வருமானவரித்துறையினர் விஜயின் வீடு, அலுவலகம் மற்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர் வீடு, அலுவலகம் எல்லாவற்றிலும் சோதனை நடத்தியது. அப்போது இந்த படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் 15 கோடியை விஜய் கணக்கில் காட்டவில்லை என சொல்லி வருமானவரித்துறை சார்பில் விஜய்க்கு 1.50 கோடி அபராதமும் மிதிக்கப்பட்டது..
ஆனால் இதை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. 2015ம் வருடம் படம் வெளியானது. அதிலிருந்து நான்கு வருடத்திற்குள் அதாவது 2019ம் வருடத்திற்குள் எனக்கு அபராதம் விதித்திருக்க வேண்டும்.. ஆனால் 2022ம் வருடம்தான் வருமான வரி அபராதம் விதித்தது. இது விதிமுறை மீறல். எனவே வருமானவரித்துறை எனக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என விஜய் அதில் கூறியிஇருந்தார்..
கடந்த சில வருடங்காளவே இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என நேற்று சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பு அளித்த தீர்ப்பில் வருமானத்துறை விஜய்க்கு அபராதம் விதித்ததில் எந்த விதிமீறலும் இல்லை. எனவே விஜய் தரப்பில் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என தெரிவித்தார்.