தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஜய்க்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததா? நீதிபதி சொன்னது என்ன?
நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபராத உத்தரவில் எந்த விதிமீறலும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
2015-16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி சோதனையின் போது, முறையாக வருமானத்தை கணக்கு காட்டவில்லை எனக் கூறி வருமான வரித்துறை விஜய்க்கு அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அபராதம் விதித்ததில் நடைமுறை தவறுகள் ஏதுமில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்குமாறு விஜய் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதை பரிசீலித்த நீதிபதி, வருமான வரித்துறை விதித்த அபராத உத்தரவை எதிர்த்து விஜய் "மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை" அணுகலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.
அரசியல் களத்தில் விஜய் தீவிரமாக இறங்கியுள்ள சூழலில், இந்த சட்ட போராட்டம் அவரது ஆதரவாளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், உரிய சட்ட வழிமுறைகளை பின்பற்றி தீர்ப்பாயத்தில் முறையிட விஜய் தரப்பு முடிவு செய்துள்ளது.
Edited by Siva