இதனாலதான் விஜய்க்கு சப்போர்ட் பண்ணேன்!.. சிலம்பரசன் ஓப்பன் டாக்!...
நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனையில் சிக்கி இதுவரை வெளியாகாமல் இருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் மறுதணிக்கை செய்ய வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இப்போது வரை இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகவில்லை..
எனவே, விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் படம் மறுதணிக்கைக்கு சென்று தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. எல்லாம் சரியாக அமைந்தால் இந்த மாத இறுதிக்குள் ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது..
ஜனநாயகன் படத்திற்கு பிரச்சனை வந்தபோது திரையுலகிலிருந்து வெகு சிலர் மட்டுமே விஜய்க்கு ஆதரவாக கருத்தை தெரிவித்தார்கள். அதில் நடிகர் சிம்புவும் ஒருவர்.. இந்நிலையில், சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவு கொடுத்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சிம்பு இத்தனை வருடங்கள் சினிமாவில் இருந்திருக்கிறார்.. கடைசியாக ஒரு படம் செய்திருக்கிறார்.. அது திரைக்கு வர வேண்டும். அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பதற்காகத்தான் டிவிட் செய்தேன். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது.. எனக்கு அதில் அனுபவம் கிடையாது.. அரசியல் பற்றி பேச நான் சரியான நபரும் கிடையாது.. அதேநேரம் அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக் கூறியிருக்கிறார்..