வியாழன், 5 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 பிப்ரவரி 2026 (21:44 IST)

தவெக தேர்தல் அறிக்கை!.. பொதுமக்கள் கருத்து கேட்பு!.. முடங்கிய தவெக இணையதளம்...

vijay
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது. கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு பற்றி பேரம் பேசுவது என வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. பெரும்பாலான கட்சிகள் கூட்டணிகளை முடிவு செய்துவிட்டன.

ஆனால், காங்கிரஸ், தேமுதிக, ராமதாஸ் தலைமையிலான பாமக ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே இதுவரை எந்த கூட்டணி என அறிவிக்கவில்லை. அதேநேரம், காங்கிரஸை பொறுத்தவரை இந்த முறையும் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. ஒருபக்கம், காங்கிரஸை தங்கள் பக்கம் இழுக்க தவெகவும் முயற்சி செய்து வருகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் கட்சியாக களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் வாக்கு எண்ணிக்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக பொதுமக்களும் கருத்தை சொல்லலாம் என அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் https://tvkmanifesto2026.com என்கிற இணையதளம் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஒரே நேரத்தில் பலரும் அந்த இணையதளத்திற்கு சென்று தங்களின் கருத்துக்களை பதிவிட முயன்றதால் அந்த இணையதளமே முடங்கிப் போனது. தற்போது தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இணையதளம் இயங்க துவங்கி இருக்கிறது..