1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rainfall Forecast Issued for 27 Districts in Tamil Nadu Including Chennai Until 1 PM Today

தொடர் மழை எச்சரிக்கை... சென்னை உள்பட 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்:

Chennai Weather
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடியவிடிய கனமழை பெய்துள்ளது. பல இடங்களில் 100 மி.மீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளதுடன், நகரின் பல தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அடுத்த 3 மணி நேரத்திற்கான வானிலை எச்சரிக்கையின்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திருச்சி, அரியலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 27 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
உள்ளாட்சி தேர்தல் இப்போதைக்கு இல்லை.. தனி அலுவலகர்களின் ஆட்சி நீடிப்பு..