1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy Rain Warning Issued for 4 Districts Including Chennai with Orange Alert

சென்னையில் பலத்த மழை நீடிக்கும்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

மழை எச்சரிக்கை
சென்னையில் சனிக்கிழமை இரவு தொடங்கிய பலத்த மழை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. பாரிமுனையில் அதிகபட்சமாக 364 மி.மீ. மழை பதிவானது. இதனையடுத்து விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை மாலை திரும்பப் பெறப்பட்டது. 
 
வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, சென்னை, திருச்சி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதாவது திங்கள்கிழமை  ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும், நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களில் நாளை செவ்வாய்க்கிழமை  இடி, மின்னலுடன் கூடிய மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. 
 
சென்னையில் பெய்த இந்த மழை மேகவெடிப்பு அல்லவென்றும், இது வழக்கமான பலத்த மழை மட்டுமே என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் சந்திரமோகன் தெரிவித்தார். சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளும், நிவாரண முகாம்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்: பொதுமக்கள் உஷாராக இருக்க எச்சரிக்கை..!