தொடர்புடைய செய்திகள்
- பாரதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்!.. வைரல் போட்டோஸ்!..
- சினிமா பிரபலங்களை வீட்டில் மட்டும் விஜய் சந்திப்பதன் பின்னணி?!.. அதுவும் கரெக்ட்தான்...
- பக்கா பிளானோடு டெல்லி சென்ற விஜய்!. 3 நாட்களில் யாரோடெல்லாம் மீட்டிங்?..
- பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை!. முதல்வர் விஜய் அறிவிப்பு...
- இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார்.. திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி..!
இப்ப சொல்ல முடியாது!.. அறிவிப்பிலிருந்து பின் வாங்கிய ராகவா லாரன்ஸ்!..
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், நடன இயக்குனர் என பல முகங்களை கொண்டவர் ராகவா லாரன்ஸ். துவக்கத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார், சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ராகவா லாரன்ஸ் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். பலருக்கும் உதவிகளை செய்து வருகிறார். ஏற்கனவே உடல் ஊனமுற்ற குழந்தைகள் நிறைய பேரை பராமரித்து வருகிறார். எனவே ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்..
தற்போது விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் ராகவா லாரன்ஸை விஜய் நிற்க வைக்க திட்டமிட்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. எனவே ராகவா லாரன்ஸ் தவெகவில் இணைவாரா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஒரு பக்கம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஒரு புதிய இயக்கத்தை துவங்கியிருக்கிறார். அதுவும் ரஜினியை முன்னிறுத்தி அவர் அதில் சில விஷயங்களையும் பேசினார். அடிப்படையில் ராகவா லாரன்ஸ் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பதால் அவர் அண்ணாமலை பக்கம் செல்வாரா அல்லது விஜய் பக்கம் செல்வாரா என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்திருக்கிறது. ஜூன் 11ம் தேதியான நாளை இது தொடர்பான அறிவிப்பு வெளியிடுவதாக ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் பாரதிராஜா சார் அவர்களின் மறைவால் திரையுலகம் தற்போது துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த இழப்பு, குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற ஆழ்ந்த தனிப்பட்ட இழப்பாக எனக்குத் தோன்றுகிறது. பாரதிராஜா சார் மீதும், சினிமாத்துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பின் மீதும் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக, எனது அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளேன். வருகி 12ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நான் என் புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன் என பதிவிட்டிருக்கிறார்.
