1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay meeting many leaders in delhi

பக்கா பிளானோடு டெல்லி சென்ற விஜய்!. 3 நாட்களில் யாரோடெல்லாம் மீட்டிங்?..

vijay
தமிழக முதல்வர் விஜய் 3 நாள் அரசு பயணமாக இன்று காலை 10 மணி அளவில் சென்னையிலிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற விஜய் அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியவரை சந்தித்தார்.
 
அதேநேரம் அப்போது அவர் சில காரணங்களால் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்திக்கவில்லை. கடந்த முறை இரண்டு நாள் பயணம் என சொல்லப்பட்டு ஒரு நாளிலேயே திரும்பிவிட்டார். ஆனால் இந்த முறை மூன்று நாள் டெல்லியில் தங்கவிருக்கிறார் விஜய். 
 
நாளை டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து அவர் வலியுறுத்துவார் என சொல்லப்படுகிறது. அதோடு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற பல முக்கிய தலைவர்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்.
 
அதோடு ராகுல் காந்தி, சோனியா காந்தி மட்டுமில்லாமல் வேறு சில தேசிய கட்சி தலைவர்களையும் சந்திக்கும் திட்டமும் இருக்கிறதாம். 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் விஜய் வருகிற 12ம் தேதி மாலை சென்னை திரும்புவார் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
சினிமா பிரபலங்களை வீட்டில் மட்டும் விஜய் சந்திப்பதன் பின்னணி?!.. அதுவும் கரெக்ட்தான்...