தொடர்புடைய செய்திகள்
- ஈஸியா தப்பிவிட முடியாது!.. எல்லாம் ஃபாஸ்ட்டா இருக்கும்!.. முதல்வர் விஜய் அதிரடி!..
- நான் பார்த்த அதே விஜய்!.. முதல்வரை சந்தித்த சினேகா!.. வைரல் போட்டோஸ்
- தவெக ஆட்சி.. ஆனா திமுக சிஸ்டம்!.. விஜய் முன்னால் இருக்கும் சவால்!...
- அஜித் லிஸ்ட்டில் 4 இயக்குனர்கள்!.. அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?..
- நாளை மீண்டும் டெல்லி செல்லும் விஜய்!.. ராகுலை சந்திப்பாரா?
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை!. முதல்வர் விஜய் அறிவிப்பு...
தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர் இயக்குனர் பாரதிராஜா. தேனி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்து 16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தமிழ் திரைப்படங்கள் ஸ்டுடியோக்களில் மட்டுமே எடுக்கப்பட்ட அந்த காலத்தில் வயல்வெளிகளில் படங்களை எடுத்தார் பாரதிராஜா.
பல புதுமுக நடிகர்கள் மற்றும் நடிகைகளை அறிமுகம் செய்து வைத்தார். தமிழ் கலாச்சாரம், தமிழர்கள் வாழ்க்கை, கிராமத்து வாழ்க்கை, கிராமத்து காதல், சாதி எதிர்ப்பு மற்றும் கிராமத்து வாழ்வியலை மண்வாசனையோடு அப்படியே திரைப்படங்களில் பிரதிபலித்தார். இவரிடம் உதவியாளராக இருந்த பாக்கியராஜ் உள்ளிட்ட பலரும் பின்னால் பெரிய இயக்குனர்களாக மாறினார்கள். ஒரு இயக்குனர் தலைமுறையையே உருவாக்கிய பெருமை பாரதிராஜாக்கு உண்டு. 6 முறை தேசிய விருதை பெற்றுள்ளார்.
வயது முப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாரதிராஜா கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார். அவரிடம் மறைவுக்கு திரைத்திறையிலிருந்து பலரும் நேரில் சென்றும், சமூகவலைத்தளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கல். தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், நாம் கட்சி தமிழர் சீமான் ஆகியோர் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்
இந்நிலையில்தான், உடல்நலக்குறைவால் காலமான இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் தற்போது அறிவித்திருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
