தொடர்புடைய செய்திகள்
- பக்கா பிளானோடு டெல்லி சென்ற விஜய்!. 3 நாட்களில் யாரோடெல்லாம் மீட்டிங்?..
- பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை!. முதல்வர் விஜய் அறிவிப்பு...
- ஈஸியா தப்பிவிட முடியாது!.. எல்லாம் ஃபாஸ்ட்டா இருக்கும்!.. முதல்வர் விஜய் அதிரடி!..
- நான் பார்த்த அதே விஜய்!.. முதல்வரை சந்தித்த சினேகா!.. வைரல் போட்டோஸ்
- ஆசைபட்டது எதுவும் நடக்கல!.. அதிருப்தியில் செங்கோட்டையன்?!.. தவெகவில் நடப்பது என்ன?..
பாரதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்!.. வைரல் போட்டோஸ்!..
தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. அவரின் படைப்புகள் கிராமத்து வாழ்க்கை, காதல், குரோதம், கோபம், அன்பு என கிராமத்து மனிதர்களிடையே இருந்த எல்லா உணர்வுகளையும் பிரதிபலித்தது.
அரங்கத்திற்குள் மட்டுமே படப்பிடிப்பு நடந்து வந்த சினிமாவை கைப்பிடித்து வெளியே கூட்டி வந்து வயல் வரப்பு பக்கம் கூட்டிப் போனார் பாரதிராஜா. அவர் வந்த பிறகுதான் தமிழ் சினிமாவின் முகமே மாறியது. அவருக்கு பின் வந்த பல இயக்குனர்களுக்கும் முன்னோடியாக பாரதிராஜா இருந்தார். இப்போதும் இருக்கிறார்.
உடல்நலக் குறைபாடு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை 2 மணியளவில் பாரதிராஜா சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் காலமானார். இதையடுத்து பல திரைப்படங்களும் நேரில் சென்று அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் தமிழக முதல்வர் விஜய் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிட்டிருக்கிறது.
