தொடர்புடைய செய்திகள்
- திருச்சி கிழக்கில் த்ரிஷா போட்டியா? ஜெயித்தால் அமைச்சர் ஆவாரா?
- சென்னை, மதுரை, கோவை, திருச்சி, குமரி.. 5 தலைநகரங்கள்.. சட்டப்பேரவை சென்னையில் இல்லை.. சீமான் தேர்தல் அறிக்கை..
- என்.டி.ஏ கூட்டணிக்கு வாருங்கள் விஜய்.. அறிக்கை வெளியிட்ட பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்..!
- காங்கிரஸ் மாநில தலைவர் திடீரென ராஜினாமா.. இக்கட்டான நிலையில் கட்சி!
- பாமக இருக்கும் அணியில் இருக்க மாட்டோம்: திருமாவளவன் உறுதி..!
விஜய்க்கும் அண்ணாமலைக்கும் தான் போட்டி: பாஜகவில் இருந்து விலகி அமர் பிரசாத் ரெட்டி..
தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி, கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகி 'இது நம்ம இயக்கம்' என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ள சூழலில், அவரோடு இணைவதற்காக பாஜகவிலிருந்து பலரும் விலகி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது அமர் பிரசாத் ரெட்டியும் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவை விட்டு விலகியது குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அமர் பிரசாத் ரெட்டி, "திமுக ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால், தமிழக பாஜக 4-5 பேரின் கட்டுப்பாட்டில் முடங்கிக் கிடக்கிறது" என்று சாடியுள்ளார்.
தேர்தலில் தொடர்ந்து தோல்வியடைந்தாலும் அவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படுவதாகவும், தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்த அண்ணாமலைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும், வருங்கால தமிழக அரசியல் என்பது அண்ணாமலைக்கும் முதல்வர் விஜய்க்கும் இடையேயான போட்டியாகத்தான் இருக்கும் என்றும், அண்ணாமலை கண்டிப்பாக முதலமைச்சராக வருவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது வரை அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
