சினிமா பிரபலங்களை வீட்டில் மட்டும் விஜய் சந்திப்பதன் பின்னணி?!.. அதுவும் கரெக்ட்தான்...
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து திரை திரைப்படத்துறையிலிருந்து மீண்டும் ஒருவர் முதல்வராக மாறியிருக்கிறார். நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 30 வருடங்களுக்கு மேல் பல திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை உருவாக்கியவர் விஜய்.
பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அவரின் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து மக்கள் சேவை பணியில் ஈடுபட்டு வந்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி சினிமாவிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட்டார் விஜய். அதோடு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. விஜயம் தமிழக முதலமைச்சராகி மாறியிருக்கிறார்.
இது விஜயின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரையுலகில் உள்ள பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. எனவே திரைப்படத் துறையை சேர்ந்த பலரும் முதல்வர் விஜயை நேரில் சென்று சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரோடு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வரு
கிறார்கள்.
தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் ஆகியவை முதல்வர் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்கள் அதன்பின் திரைப்பட பிரபலங்களை விஜய் தலைமை செயலகத்தில் சந்திக்கவில்லை. மாறாக நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலேயே சந்தித்தார். அங்குதான் அவரை சிபிராஜ், பார்த்திபன், சினேகா,, ஆர்ஜே பாலாஜி, வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், நடிகை குஷ்பூ சுந்தர் சி உள்ளிட்ட பலரும் சந்தித்தார்கள், சினிமா துறையை சார்ந்தவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்தால் அதை விமர்சிப்பார்கள் என்பதால்தான் விஜய் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.
